தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படம், வரும் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தை காண்பதற்கு தான், திரையுலகினர் பலரும் மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே, இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, இந்த இசை வெளியீட்டு விழாவை, மலோசியாவில் உள்ள பிரம்மாண்ட அரங்கில் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், அந்த அரங்கில் வேறொரு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளதால், லியோ படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். இதனால், தேதியை மாற்றலாமா? அல்லது இடத்தை மாற்றலாமா என்று ஆலோசித்து வருகின்றனர்.