மாஸ்டர் படத்திற்கு பிறகு, லோகேஷ் கனகராஜ்-ம், தளபதி விஜயும், லியோ படத்தில் ஒன்றாக இணைந்துள்ளனர். ரிலீசுக்கு முன்பே, வசூலில் பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், ரெடியா என்று ரசிகர்கள் கேட்டிருந்தார். இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள், நிச்சயம் இது லியோ படத்தின் அப்டேட் தான் என்றும், என்ன அப்டேட்டாக இருக்கும் என்றும், பல்வேறு யூகங்களை தெரிவித்து வந்தனர்.
இந்த யூகங்களுக்கு மத்தியில், உண்மையான அப்டேட் என்ன என்பதை, தற்போது லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால், தளபதி விஜயின் பிறந்த நாளையொட்டி, லியோ படத்தின் முதல் சிங்கில் பாடல் வெளியாக உள்ளது. இதனை அறிந்த விஜயின் ரசிகர்கள், உற்சாகம் அடைந்துள்ளனர்.