லியோவுக்கு வந்த சிக்கல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், வரும் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு வெளியீட்டிற்கு புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

அதாவது, லியோ வெளியாகும் அதே தேதியில், பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி என்ற படமும், ரவி தேஜாவின் டைகர் நாகேஸ்வர ராவ் என்ற படமும் வெளியாக உள்ளன.

இரண்டும் நேரடி தெலுங்கு படம் என்பதால், அந்த மாநிலத்தில் அப்படங்களுக்கு தான், அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படும். இதனால், விஜயின் லியோ படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், படத்தின் விமர்சனங்களை பொறுத்து, ஒதுக்கப்படும் திரையரங்குகளின் அளவு, மாற்றப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News