மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களுக்கு பிறகு, லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் ஷீட்டிங் பணிகள் அனைத்தும் முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், தயாரிப்பாளர் லலித் குமார்,
இந்த படம் குறித்து பேசியுள்ளார்.
அதில், விஜயின் சினிமா வாழ்க்கையிலேயே, லியோ படத்தில் தான் அவரது நடிப்பு உச்சமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இடைவேளைக்கு முந்தைய 8 நிமிடங்கள் வேறலெவலில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த செய்தி, இணையத்தில் வெளியாகி, விஜய் ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.