“லியோ LCU படமா? இல்லையா?” – த்ரிஷா சொன்ன பதிலால் ரசிகர்கள் ஆச்சரியம்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், LCU என்ற கேங்ஸ்டர் உலகத்தை படைத்துள்ளார். இந்த உலகத்தில், கைதி, விக்ரம் ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த உலகத்தில், விஜயின் லியோ திரைப்படமும் இடம்பெறுமா என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில், லியோ படத்தில் நடித்து வரும் நடிகை த்ரிஷா, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டிருந்தார்.

அப்போது, லியோ படம் LCU-ல் வருமா? வராதா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “இந்த கேள்விக்கான பதில் எனக்கு தெரியும்.. ஆனால், அதனை சொல்லும் அனுமதி எனக்கு இல்லை” என்று தெரிவித்தார்.

மேலும், அக்டோபர் மாதம் வெளியாகும் இந்த படத்தில், ரசிகர்களுக்கு பல்வேறு ஆச்சரியங்கள் காத்திருக்கிறது என்றும் அவர் கூறினார். இதனைக் கேட்ட ரசிகர்கள், பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News