லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இப்படத்தின் முதல் சிங்கில் பாடலான நான் ரெடி தான், சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
ஆனால், அதன்பிறகு, படத்தின் பெரிய அப்டேட்கள் எதுவும் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில், இப்படத்தின் இன்னொரு முக்கிய அப்டேட் வெளிவந்துள்ளது.
அதன்படி, லியோவின் இரண்டாவது சிங்கிலின் அறிவிப்பு, இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளதாம்.
இதுமட்டுமின்றி, செப்டம்பர் 2-வது வாரத்தில் இருந்து, லியோ அப்டேட்கள் தொடர்ச்சியாக வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.