Connect with us

Raj News Tamil

லியோ படத்தின் 2-வது சிங்கிள் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சினிமா

லியோ படத்தின் 2-வது சிங்கிள் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ.

த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான நான் ரெடி தான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

அந்த பாடல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், அதன்பிறகு, இப்படத்தின் பெரிய அப்டேட்கள் எதுவும் வெளியாகாமலே இருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் 2-வது சிங்கிள் பாடல் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, 2-வது சிங்கிளின் புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ள படக்குழு, இப்பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது.

More in சினிமா

To Top