பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள், காலை 4 மணிக்கு திரையிடுவது வழக்கம். இந்த காட்சியின் டிக்கெட் கட்டணமும், அதிக அளவில் விற்கப்படுகின்றன.
இது ஒரு பிரச்சனையாக இருந்தாலும், ரசிகர்களின் கொண்டாட்டங்களால், போக்குவரத்தும் பெரும் பாதிப்பை சந்திக்கின்றன.
இதன்காரணமாக, அதிகாலை காட்சிகளுக்கு தமிழக அரசு சமீபத்தில் தடை விதித்தது.
இந்நிலையில், இந்த தடை தங்களது படத்திற்கு நீக்க வேண்டும் என்றும், அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும், வலியுறுத்தி, லியோ படத் தயாரிப்பாளர், நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும், அந்த மனுவில் அவர் கூறியுள்ளார். இந்த வழக்கின் விசாரணை, மதியம் 1 மணிக்கு விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.