விஜயின் லியோ திரைப்படம் எப்படி உள்ளது? உதயநிதியின் விமர்சனம்!

தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம், பல்வேறு பிரச்சனைகளை தாண்டி, நாளை வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்தை காண்பதற்கு, ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆவலில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இணையத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தளபதி விஜயின் லியோ திரைப்படம் சூப்பராக உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், லோகேஷ் கனகராஜ், அனிருத், சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் ஆகியோரை பாராட்டியுள்ளார்.

மேலும், LCU என்றும் ஹேஷ்டேக் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள்,பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News