லியோ திரைப்படம் இன்றைய சினிமா ஹெட்லைன்ஸாக இருந்து வருகிறது. இன்னும் ஒரு வாரங்களுக்கு, லியோ பற்றிய செய்தி தான், பெரும்பாலான இணையதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது.
அந்த அளவிற்கு, படக்குழுவினர் தொடர்ந்து, பல்வேறு முக்கிய அப்டேட்களை கொடுத்து வருகின்றனர். இவ்வாறு இருக்க, லியோ படக்குழுவினர் இன்னொரு போஸ்டரை வெளியிட்டு, முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளனர்.
அதாவது, இதுவரை பொன்னியின் செல்வன் 1, மற்றும் 2-ஆம் பாகங்களை தவிர, வேறு எந்த படமும், ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகாமல் இருந்தது.
அதற்கு அடுத்த படியாக, லியோ திரைப்படம், ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் என்று தகவல் வந்தது. இந்த தகவலை உறுதி செய்யும் வகையில், பயங்கர மாஸான போஸ்டர் ஒன்றை, படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.