லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா 30-ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் திடீரென ரத்தானது.இது சார்ந்து பலரும் பல தரப்பட்ட கருத்துகளை வெளியிட்டு வந்தனர்.

தற்போது இது தொடர்பாக சென்னை மாநகர போலீசாருக்கு தயாரிப்பு நிறுவனம் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அதில், “30-ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறவிருந்த ‘லியோ’ இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு அதிக பாஸ்கள் கோரிக்கை வந்ததால் பாதுகாப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சிரமத்திற்கு வருந்துகிறோம்” என்று அதிகாரப்பூர்வமான கடிதம் வெளிவந்து
இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது.