Connect with us

Raj News Tamil

லியோ இசைவெளியீட்டு விழா ரத்து – இது தான் காரணமா?

சினிமா

லியோ இசைவெளியீட்டு விழா ரத்து – இது தான் காரணமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் லியோ. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 30ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், இந்நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து, லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடீயோ தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “பாதுகாப்பு காரணங்கள் மற்றும் விழாவுக்கான பாஸ்களை கேட்டு அதிகமானோர் கோரிக்கைகள் வைப்பதால் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை ரத்து செய்து விடலாம் என்று முடிவு செய்துள்ளோம்.

ரசிகர்களின் விருப்பப்படி அடிக்கடி அப்டேட்கள் வெளியிடப்படும். “இதற்கு அரசியல் அழுத்தங்களோ அல்லது வேறு காரணங்களோ இல்லை” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

More in சினிமா

To Top