லியோ காட்சிகள் ரத்து…அதிர்ச்சியில் உறைந்து போன விஜய் ரசிகர்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து புதுச்சேரியில் ரசிகர்கள் சார்பில் 19-ம் தேதி காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் ‘லியோ’ படத்தின் காலை 7 மணி காட்சியை ரத்து செய்ய புதுச்சேரி திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதற்கு காரணம் என்னவென்றால் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு காட்சிகள் வெளியாவதால் புதுச்சேரியில் காலை 7 மணிக்கு படத்தை வெளியிட விநியோகஸ்தர்கள் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த செய்தி விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News