லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லியோ படத்தின் ட்ரைலர் நேற்று மாலை 6:30 மணிக்கு வெளியானது. ட்ரைலர் வெளியான சில நிமிடங்களில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்தது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ இரண்டு மாதங்களுக்கு பிறகுதான் 30 மில்லியன் பார்வையார்களை எட்டியுள்ளது. ஆனால் லியோ ட்ரைலர் ஒரே நாளில் 31 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
லியோ படத்தின் ட்ரைலர் செய்த சாதனையை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.