லியோ திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இதனை பார்ப்பதற்கு, ரசிகர்கள் அனைவரும், மிகவும் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் டிரைலரை, பிரபலம் ஒருவர் பார்த்துவிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதாவது, ஜில் ஜங் ஜக் படத்தின் இயக்குநர் தீரஜ் வைத்தி, லியோ படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், டிரைலரை பார்த்தபிறகு, உங்க தாவம்பட்டை எல்லாம் தரைல தான் இருக்கும் என்று கூறியுள்ளார். இதனை பார்க்கும்போது, டிரைலர் செம மாஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.