விஜயின் லியோ திரைப்படம், வரும் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ரிலீஸ்-க்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், படத்தின் புரமோஷன் பணிகளும், பின்னணி பணிகளும், விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இதற்கிடையே, இப்படத்தின் 2-வது சிங்கிள் பாடலும் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், லியோ படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த திரைப்படம், நாளை சென்சாருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாம். சென்சார் பணிகள் அனைத்து முடிந்த பிறகு, படத்தின் டிரைலர் கட் செய்யும் பணியில், படக்குழுவினர் ஈடுபடுவார்கள் என்பது உறுதி. அநேகமாக, இப்படத்தின் டிரைலர் 5-ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.