நடப்போம் நலம் பெறுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதளதில் பதிவிட்டிருப்பதாவது:
நீரிழிவு நோயும், இரத்த அழுத்தமும் இந்தியர்களைப் பெரிதும் அச்சுறுத்துகின்றது. இதற்கு ஆரம்பகட்ட தீர்வாக மருத்துவ உலகம் முன்வைப்பது முறையான நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் தான்.
எனவே, அனைத்து மாவாட்டங்களிலும் நமது அரசு தொடங்கியுள்ள நலவாழ்வு நடைப்பயிற்சி 8 கி.மீ. சுகாதார நடைபாதை (Health Walk) திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்! நடப்போம் நலம் பெறுவோம்! என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.