லிபியா வெள்ளம்: பலி எண்ணிக்கை 11,300-ஆக அதிகரிப்பு!

வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியாவில் வெள்ள நீா் ஊருக்குள் பாய்ந்ததில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 11,300-ஆக உயர்ந்துள்ளது.

லிபியா, மத்தியதரைக் கடலையொட்டி அமைந்துள்ளது. அந்தக் கடலில் உருவான டேனியல் புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிழக்கு லிபியாவைக் கடந்தது.

அங்கு தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, அந்தப் பகுதியில் ஓடும் வாடி டொ்ணா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதன் விளைவாக, அந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இரு அணைகளில் உடைந்து வெள்ள நீா் அருகிலுள்ள டொ்ணா நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பாய்ந்தது.

இது குறித்து ‘அசோசியேட்டட் பிரஸ்’ செய்தி நிறுவனத்திடம் அந்த அமைப்பின் பொதுச் செயலா் மரியே அல்-ட்ரெசி கூறியதாவது:

லிபியாவில் அணைகள் உடைந்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் சடலங்களை மீட்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்தப் பேரிடரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை தற்போது 11,300-ஆக அதிகரித்துள்ளது.

இது தவிர, மேலும் 10,100 போ் மத்தியரைக்கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகக் என்று கூறப்படுகிறது என்றார் அவா்.

RELATED ARTICLES

Recent News