சமந்தா போல் அரியவகை நோயால் அவதிப்படும் நெஞ்சிருக்கும் வரை நடிகை..!

எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கத்தில் வெளியான நெஞ்சிரும் வரை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூணம் கவுர்.

தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்த இவர், தற்போது பெரிய வாய்ப்புகள் இல்லாமல் கெஸ்ட் ரோல்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர், பைப்ரோமில்ஜியா என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் உடல் சோர்வு, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளில் அவதிப்பட்டா இவர். தற்போது அதனுடன் வாழ்ந்து வருவதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே நடிகை சமந்தா மயோசிடிஸ் என்னும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பூணம் கவுரும் இதுபோன்ற அரிய நோயால் பதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.