வரம்பு மீறும் ஊடகம் – செக் வைத்த பாரதிராஜா..!

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா, சமீபத்தில் தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மூத்த இயக்குனரும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இனிமேல் திரையுலக பிரபலங்களின் துக்க நிகழ்வில் மீடியாக்களுக்கு அனுமதி இல்லை என்றும் சில மீடியாக்கள் ஊடக தர்மத்தை மீறி நடந்துகொள்வதாலேயே, இப்படிப்பட்ட விதிமுறைகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனுமதி இல்லாமல் மீடியாக்களை அனுமதிக்க வேண்டாம் என்ற கோரிக்கையையும் காவல்துறையினரிடம் முன் வைத்துள்ளார் பாரதிராஜா.

RELATED ARTICLES

Recent News