24 மணி நேரமும் படுஜோராக நடைபெறும் மதுவிற்பனை: கண்டுகொள்ளாத காவல்துறை!

சென்னை போரூர் எஸ்ஆர்எம்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக அரசு நிர்ணயித்த நேரத்தை மீறி இரவு மற்றும் பகல் நேரங்களில் 24 மணி நேரமும் மது விற்பனையானது படுஜோராக நடைபெற்று வருவதால் போரூர் சுற்றுவட்டார பகுதிகளில் வழிப்பறி, கொலை, கொள்ளை, உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்து இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே கள்ளச் சந்தையில் மது விற்பனை நடைபெறும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோ பதிவில் கூட்டம் கூட்டமாக மதுப்பிரியர்கள் மதுக்களை வாங்க முண்டியடித்து வாங்கி சர்வ சாதாரணமாக மது கடையில் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ வெளியாகிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே உள்ளூர் காவலர்களிடம் இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தோம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆவடி காவல் ஆணையர் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபடும் கும்பல் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News