“குட்டி காவலர்”: மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு!

குட்டி காவலர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கிவைத்தார். அப்போது மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இளம் பள்ளிக் குழந்தைகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி நன்கு வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் மூலம் கற்பிக்க குட்டி காவலர் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மற்றும் கோயம்புத்தூர், உயிர் அறக்கட்டளை இணைந்து செயல்படுத்தும் இத்திட்டத்தை, சென்னை தலைமை செயலகத்தில் காணொலி மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அப்போது அவர் உறுதிமொழி வாசிக்க, அதனை திரும்ப சொல்லி மாணவர்கள் ஏற்றனர்.

முதலமைச்சர் முன்னிலையில் 5 ஆயிரம் மாணவர்களும், கோவை கொடிசியா வர்த்தக மையத்திலும், நான்கரை லட்சம் மாணவர்களும் உறுதிமொழி ஏற்றனர்.