🔴 Live Updates: தமிழக பட்ஜெட் 2024-2025!

தமிழ்நாடு சட்டபேரவையில் 2024 – 2025 ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

பட்ஜெட் உரை:

சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட நூல்களை மேலும் 25 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய ₹2 கோடி ஒதுக்கீடு.

▪️ அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும்.

▪️ தமிழ் மொழியை நவீனப்படுத்த AI உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ₹5 கோடி ஒதுக்கீடு.

▪️ முசிறி, தொண்டி ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடத்தப்படும்.

▪️ ₹65 லட்சம் செலவில் அழகன் குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.

▪️ கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ளப்படும்.

▪️ கீழடியில் திறந்தவெளி அரங்கு ₹17 கோடி செலவில் அமைக்கப்படும்.

▪️ சிந்து சமவெளி நூற்றாண்டு கருத்தரங்கு சென்னையில் நடத்தப்படும்.

▪️சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் பொழிபெயர்க்க ₹2 கோடி ஒதுக்கீடு!

▪️ 2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட ₹356 கோடி ஒதுக்கீடு.

▪️ 5000 ஏரிகள், குளங்கள் புனரமைப்பு செய்ய ₹500 கோடி ஒதுக்கீடு.

▪️ முதலமைச்சரின் தாயுமானவர் என்ற புதிய திட்டம் அறிமுகம்.

▪️ நிதி ஆயோக் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 2.2% மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற அரசு முடிவு. மிகவும் வறிய நிலையில் உள்ள 5 லட்சம் ஏழைக்குடும்பத்தினருக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு உறுதி.

▪️ சிங்காரச் சென்னை 2 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு.

▪️ சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த ₹300 கோடி ஒதுக்கீடு.

▪️ சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ₹100 கோடி ஒதுக்கீடு.

▪️ வடசென்னை பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ₹1000 கோடி ஒதுக்கீடு.

▪️ மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய நகரங்களில் நதிகளை மீட்டெடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ₹5 கோடி ஒதுக்கீடு.

▪️ அடையாறு நதி சீரமைப்புக்கு ₹1500 கோடி ஒதுக்கீடு.

▪️ சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ₹100 கோடி ஒதுக்கீடு.

▪️ சென்னை மாநகரில் பொதுக்கழிப்பிடங்களை மேம்படுத்த ₹430 கோடியில் புதிய திட்டம்.

▪️ 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும்; கலைஞரின் கனவு இல்லம் என இத்திட்டத்திற்கு பெயர் சூட்டல்.

▪️ கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் சாலைப்பணிகள் ₹1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

▪️ வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய பகுதிகளை மேம்படுத்த புதிய திட்டம்.

▪️ சென்னை பூவிருந்தவல்லி அருகே திரைப்பட நகரம் அமைக்க ₹500 கோடி ஒதுக்கீடு.

▪️ நாமக்கல்லில் ₹358 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

▪️வடசென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு ₹1000 கோடி.

▪️அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும், புதுமைப்பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

▪️ கல்லணை கால்வாயை புனரமைக்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

▪️ செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும்

▪️ 250 கோடியில் கடற்கரைகள் மேம்படுத்தப்படும்

▪️ 500 மினி பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு நடபாண்டிலேயே செயல்பாட்டுக்கு வர இருக்கின்றது

▪️ விருதுநகர் சேலத்தில் 2483 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்

▪️ 2030-ம் ஆண்டுக்குள் 100 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

▪️ நீர்வளத் துறைக்கு 8,398 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

▪️ தமிழ்நாட்டில் முதல்முறையாக உலக புத்தொழில் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது

▪️ தூத்துக்குடியில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும்

▪️ மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 20,198 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

▪️ மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்க 35,000 கோடி நிதி ஒதுக்கீடு

▪️ தொழில் நிறுவனங்கள் மூலம் பெண்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு அளித்தால் பத்து சதவீதம் ஊதிய மானியம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்

▪️ கோவையில் 1100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்

▪️ இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு 440 கோடி நிதி ஒதுக்கீடு

▪️ தமிழ்நாட்டில் நான்கு முக்கிய நகரங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் நிறுவப்படும்

▪️ நடப்பு நிதி ஆண்டில் மூன்றாயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்

▪️ தமிழ் புதல்வன் என்ற புதிய திட்டம் அறிமுகம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் உதவித்தொகை

▪️ பள்ளிக்கல்வித்துறையில் நடப்பாண்டில் 44042 கோடி நிதி ஒதுக்கீடு

▪️ ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பள்ளி கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்

▪️ 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 15000 திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்படும்

▪️ இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் இரண்டாம் கட்டத்தை செய்ய 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

▪️ அரசு பொறியியல் கலை அறிவியல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டமைப்பு பணிகளுக்கு 200 கோடி நிதி ஒதுக்கீடு

▪️ கோயம்புத்தூரில் மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயரால் உருவாக்கப்படும்

▪️ நடப்பாண்டில் உயர் கல்வித்துறைக்கு 812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

▪️ விருதுநகர் கன்னியாகுமரி புதுக்கோட்டை சேலம் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் சிறுதொழில் தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும்

▪️ சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நடப்பாண்டு 12000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

▪️ ஜெர்மனி நிறுவனத்துடன் இணைந்து 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்

▪️ பூவிருந்தமல்லி கோடம்பாக்கம் மெட்ரோ ரயில் சேவை 2025 டிசம்பரில் செயல்பாட்டிற்கு வரும்

▪️ விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது

▪️ விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 4,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

▪️ சென்னை விமான நிலைய முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சபையில் நீட்டிக்க நடவடிக்கை

▪️ விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்

▪️ விமான நிலையம்- கிளம்பாக்கம் கோயம்பேடு முதல் ஆவடி, பூந்தமல்லி முதல் பரந்தூர் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும்

▪️ 623 கோடியில் சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும் குறளகம் நவீனப்படுத்தப்படும்

▪️ ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோவிலுக்கு திருக்குடாமலுக்கு செய்வதற்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது

▪️ திருப்பரங்குன்றம் திருநீர்மலை கோயில்களில் ரோப் கார் வசதி செய்யப்படும்

▪️ ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துறைக்கு 376 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

▪️ சுற்றுலாத்துறை மேம்படுத்த சுற்றுலா வளர்ச்சி குழுமங்கள் உருவாக்கப்படும்

▪️ கலைஞர் கன்வென்ஷன் சென்டர் முட்டுகாட்டில் அமைக்கப்படும்

▪️ உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு அரங்கம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நவீன அடையாளங்களில் ஒன்றாக கட்டப்படும்

▪️ தமிழ்நாட்டில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 66 ஆயிரத்து 520 பேருக்கு அரசு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

▪️ திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது

▪️ பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன

▪️ வருகிற ஜூன் மாதத்திற்குள் பத்தாயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்

▪️ மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 3.5 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது

▪️ உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது

▪️ சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதால் தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து அமைதி நிலவி வருகிறது

▪️ திருச்சி திருவெரும்பூரில் நவீன சிறைச்சாலை அமைக்கப்படும்

▪️ சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் ஒன்றிய அரசு தாமதம் செய்கிறது

▪️ தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசின் நிதி வழங்கவில்லை

▪️ நவீன தீயணைப்பு வாகனங்கள் வாங்க 137 கோடி ரூபாய் ஒதுக்கீடு

▪️ ஒன்றிய அரசின் செயல்பாட்டால் தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு வகையில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது

▪️ வெள்ள பாதிப்புக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒன்றிய அரசு இதுவரை நிதி வழங்கவில்லை

▪️ இரண்டு ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு பணி வழங்கப்படும்

▪️ நிதி பற்றாக்குறை 94,060 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது

RELATED ARTICLES

Recent News