Connect with us

Raj News Tamil

🔴 Live Updates: தமிழக வேளாண் பட்ஜெட் 2024-2025!

Trending

🔴 Live Updates: தமிழக வேளாண் பட்ஜெட் 2024-2025!

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்ற திருக்குறளுடன் வேளான் பட்ஜெட்டை உரையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கினார்.

2020-2021ம் ஆண்டில் 152 லட்சம் ஏக்கராக இருந்த வேளாண் சாகுபடி பரப்பு, 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு 45 லட்சம் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

வேளாண் பணிகளுக்கான ஊதியம் தற்போது அதிகமாக உள்ளது.

இதனை எதிர்கொள்ள வேளாண் பணிகளுக்கு தேவையான அனைத்து வகையான வேளாண் இயந்திரங்களும், கருவிகளும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

கலைஞர் வேளாண் திட்டம் 7,075 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க, வேளாண் பொருட்களை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்கிறது.

மண்வளத்தை பேணிக்காக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான உயிர் வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செய்முறைகளையும் ஊக்கப்படுத்திடவும் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் என்ற புதிய திட்டம் 206 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.

ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து மண்ணின் வளம் காக்க 6 கோடியே 27 லட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

வேம்பினை பரவலாக்கம் செய்திடும் வகையில் 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் வேளாண்காடுகள் திட்டத்தில் இலவசமாக விநியோகம் செய்யப்படும். இதற்கென 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

வட்டாரத்திற்கு ஒரு கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு உயிர்ம வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணை உருவாக்கப்பட்டு இதர விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்க 38 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு.

2024-25 ஆம் ஆண்டில் 14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட 42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் தேனீ முனையம் உருவாக்கப்படும்.

10 உழவர் அங்காடிகள் 5 கோடி ரூபாய் மாநில நிதியில் செயல்படுத்தப்படும்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2482 கிராம ஊராட்சிகளில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

கிராமங்களில் மறுமலர்ச்சி ஏற்படுத்திட ஒரு கிராமம் ஒரு பயிர் என்ற புதிய திட்டம் 15 ஆயிரத்து 280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்.

10 அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் தோட்டக்கலை விற்பனை மையங்கள், ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் தோட்டக்கலை நடவுச் செடிகள், உயிர் உரங்கள், மண்புழு உரம், உயிரி பூச்சிக்கொல்லிகள், தோட்டக்கலை விளைபொருட்கள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களோடு, வீட்டுத் தோட்டத்திற்குத் தேவையான மண்தொட்டிகள், செடிவளர்ப்புப் பைகள், கருவிகள் ஆகியவையும் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்குமாறு விற்பனை செய்ய, முக்கிய சாலைகளை ஒட்டி அமைந்துள்ள பத்து அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் தோட்டக்கலை விற்பனை மையங்கள், ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், 3 கோடியே 60 இலட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் தேனீ முனையம் உருவாக்கப்படும்.

தேனீக்களின் தனித்துவம் அவை தித்திக்கும் தேனைத் திரட்டுவதால் மட்டுமல்ல, மலர்களுக்குள் மகரந்தச்சேர்க்கை நிகழ்த்துவதால்தான் என கூறினார்.

மேலும், மக்களின் உடல்நலத்தில் தேனீ வளர்ப்பின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில், 3 கோடியே 60 இலட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் தேனீ முனையம் உருவாக்கப்படும் என தெரிவித்த அவர், இத்திட்டத்தில், தேன் பரிசோதனைக் கூடமும், தேன் சார்ந்த பொருட்களைப் பதப்படுத்தும் கூடங்களும் அமைக்கப்பட்டு, தேனீ வளர்ப்போர்க்கு உரிய பயிற்சிகளும் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஊட்டி ரோஜா பூங்காவில் புதிய ரோஜா இரகங்களை அறிமுகம் செய்து பொதுமக்களை கவரும் வகையில் பூங்கா மேம்படுத்தப்படும்.

சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து உரையாற்றிய அவர், உதகையில் அரசு ரோஜா பூங்காவில் பெரிய, சிறிய வகை ரோஜாக்கள், கொடி ரோஜா போன்ற 4,201 வகைகளை உள்ளடக்கிய 32,000 ரோஜாச் செடிகள் உள்ளதாக கூறினார்.

இந்த உலகப் புகழ்பெற்ற அரசு ரோஜா பூங்காவில் ஆண்டுக்கு சராசரியாக 10 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்து அனைத்து வகையான ரோஜாக்களையும் கண்டு மகிழ்வதாக கூறிய அவர், இப்பூங்காவின் ரோஜா தொகுப்பினைச் செறிவூட்டும் வகையில், முதற்கட்டமாக, 100 புதிய இரக ரோஜா வகைகள் நடவு செய்யப்பட்டு சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரும் வண்ணம் இப்பூங்கா மேம்படுத்தப்படுத்தப்படும்.

2,482 கிராம ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துடன் இணைந்து தொடர்ந்து செயல்படுத்திட 200 கோடி நிதி ஒதுக்கீடு.

நூறு உழவர் அங்காடிகளுக்கு ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கீடு.

25,000 ஏக்கர் பரப்பளவில் எள் சாகுபடி பரப்பு விரிவாக்க திட்டம் ரூபாய் 3 கோடி நிதி ஒதுக்கீடு.

உழவர் சந்தைகளை போன்று தரமான வேளாண் பொருட்களை நகர்ப்புறங்களில் விற்பனை செய்ய உழவர் அங்காடி நூறு இடங்களில் ஐந்து கோடி நிதியில் அமைக்கப்படும்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு 200 கோடி நிதி ஒதுக்கீடு.

நிலக்கடலை போன்ற வேளாண் பயிர்களில் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பிற்கு ஜிப்சம் வழங்க ரூபாய் 1 கோடி நிதி ஒதுக்கீடு. ஐம்பதாயிரம் விவசாயிகள் பயன்பெறுவர்.

10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் வேளாண் காடுகள் திட்டத்தில் இலவசமாக விநியோகிக்க இரண்டு கோடி நிதி ஒதுக்கீடு.

தேனி வளர்ப்பு பயிற்சிகள் அளித்திட குமரியில் பரிசோதனை பதப்படுத்தும் கூடங்கள் அமைத்து தேனி வளர்ப்பு பயிற்சிகள் அளித்திட 3.60 கோடி நிதி ஒதுக்கீடு.

பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்க 50 லட்சம் நிதி ஒதுக்கீடு.

சிறுதானியங்கள் பயிர் வகைகள் எண்ணெய் வித்துக்கள் பயிரிட 36 கோடி நிதி ஒதுக்கீடு.

இயற்கை சீற்றங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து மீண்டுவர 1.775 கோடி பயிர் காப்பீட்டு திட்டம்.

முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம் செயல்படுத்திட 41.35 கோடி நிதி ஒதுக்கீடு.

சர்க்கரை ஆலைகளின் செயல் திறன் உயர்த்திட 12.40 கோடி நிதி ஒதுக்கீடு.

2482 கிராம ஊராட்சிகளில் கிராம வேளாண் முன்னேற்றக் குழுக்கள் உருவாக்கிய 2.48 கோடி நிதி ஒதுக்கீடு.

உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்க 5 லட்சம் நிதி ஒதுக்கீடு.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை

தர்மபுரி,திருப்பூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய ஏழு மாவட்டங்களில் 55 வட்டங்களில் சுமார் 110 கிராமங்களில் வறட்சிணிப்பிற்கான சிறப்பு உதவி திட்டம் 2024 25 ஆம் ஆண்டு முதல் 110 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

பனைப் பொருட்கள் வளர்ச்சி பனை மேம்பாட்டு இயக்கம்

2024 25 ஆம் ஆண்டில் பனை சாகுபடியினை ஊக்குவிக்க 10 லட்சம் பனை விதைகள் தோட்டக்கலைத் துறையின் மூலம் நடப்படும் மேலும் பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு 200 பனைத் தொழிலாளர்களுக்கு தரமான பனைவெல்லம் பனங்கற்கண்டு பிற மதிப்பு கூட்டுப் பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சிகளும் 100 மகளிருக்கு பனை ஓலை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி பெற்ற அனைவரும் உரிய கருவிகளும் வழங்கப்படும் இதற்காக 1 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

எரிசக்தித் துறை

பாசன வேளாண்மையினால் ஏற்படும் ஆதாயங்களை உணர்ந்து நிலத்தடி நீரினை பயன்படுத்தி விவசாயிகள் அதிக உற்பத்தி செய்து உலகுக்கு அளித்து தாமும் உய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு வேளாண் பாசனத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது இதுவரை 23 லட்சத்து 51 ஆயிரம் இலவசம் மின் இணைப்புகளுக்கு மும்மூனை மின்சாரம் வழங்கப்பட்டு விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு தேவையான கட்டண தொகையாக சுமார் 7280 கோடி ரூபாய் நிதி இணை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு அரசு வழங்கும்.

மீன்வளம்

உள்நாட்டு மீன் வளர்போரை ஊக்குவித்து உள்ளூர் சந்தைகளில் மீன் தேவையை நிறைவு செய்திடும் வகையில் புதிதாக நன்னீர் மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்தல், இடுபொருள் மானியம் வழங்குதல், உயிர்கூழ்ம முறையில் மீன் வளர்ப்பு நீரினை மறுசுழற்சி செய்து மீன் வளர்ப்பு மீன் தீவன ஆலை அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்திட மொத்தம் 4 கோடியே 60 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

கால்நடை பராமரிப்பு

2024 25 ஆம் ஆண்டில் தோப்புகள் பழத் தோட்டங்களில் 5000 ஏக்கர் பரப்பில் தீவனப் பயிரை ஊடுபயிராக பயிரிட ஏதுவாக இத்திட்டம் 2 கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

நீர்வளத்துறை

2024 25 ஆம் ஆண்டில் காவிரி டெல்டா பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன் 5338 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஆறுகள் கால்வாய்கள் வாய்க்கால்களை டூர் வாழ்வதற்கு 110 கோடி ரூபாய் செலவில் 919 பணிகள் மேற்கொள்ளப்படும்.

More in Trending

To Top