திருமணத்திற்கு முன்பே லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்..?

மணிரத்ணம் இயக்கத்தில் வெளியான கடல் திரைப்படத்தில் அறிமுகமானவர் கெளதம் கார்த்திக். பின்னர் வை ராஜா வை, ரங்கூன், தேவரட்டம் போன்ற படத்தில் நடித்த இவர், தேவராட்டம் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகனை காதலித்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 28-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக இருவரும் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

மேலும் இருவரும் திருமணத்திற்கு முன்பே 3-ஆண்டுகள் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப் முறையில் இருந்ததாக திரைவட்டாரங்கள் மத்தியில் தகவல் பரவியது. இதனை முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை மஞ்சிமா மோகன் பதில் கொடுத்துள்ளார். ஆதாவது கொரானா காலத்தில் தனக்கு ஒரு அம்மாவாக கெளதம் இருந்தார் எனக் கூறிய மஞ்சிமா, பொதுவெளியில் கண்ட ஊடங்கள் தவறாக எழுதிவருகிறது என காட்டமாக பதிலடி அளித்துள்ளார்.