எகிப்து நாட்டில் இருந்து ஸ்ட்ராபெர்ரி பழங்கள் இங்கிலாந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், இங்கிலாந்து நாட்டில் உள்ள சூப்பர் மார்கெட் ஒன்றிற்கு, ஸ்ட்ராபெர்ரி பழங்கள் வந்துள்ளன. பேக் செய்யப்பட்டிருந்த அந்த பழங்களை, சூப்பர் மார்கெட்டுக்கு வந்த பெண் ஒருவர் வாங்கிச் சென்றுள்ளார்.
வீட்டிற்கு வந்த பிறகு, பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைத்துவிட்டு, தன்னுடைய அன்றாட பணிகளை செய்துள்ளார். பின்னர், அந்த பழங்களை சாப்பிடுவதற்காக வெளியே எடுத்தபோது, அந்த பேக்கட்டில் வால் இல்லாத பல்லி ஒன்று உயிருடன் இருந்துள்ளது. அது எகிப்திய கொக்கோ என்ற வகையை சார்ந்த பல்லியாம்.
எனவே, எகிப்து நாட்டில் இருந்து தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு வந்துள்ளது என்று அந்த பெண் கணித்துள்ளார். மூடி வைக்கப்பட்டிருந்த பாக்கெட்டில், 4,500 கி.மீ பயணம் செய்த பல்லி, எப்படி உயிருடன் இருந்தது என்று அந்த பெண் குழம்பியுள்ளார்.
இதையடுத்து, அந்நாட்டில் உள்ள விலங்குகள் நல சங்கத்தை தொடர்பு கொண்ட அவர், பல்லியை பற்றி கூறியுள்ளார். பின்னர், அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்த அவர்கள், பல்லியை அங்கிருந்து பத்திரமாக எடுத்துச் சென்றனர்.