10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர் கறுப்பையாவை 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து செய்துள்ளனர்.
பரமக்குடி அருகே கருங்குளம் கிராம ஊரணியில் சவடு மண் அள்ளுவதற்கு நடைச்சீட்டு வழங்குவதற்கு பாலமுருகன் என்பவரிடம் லஞ்சமாக ரூபாய் 10,000 வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் கறுப்பையாவை ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஆய்வாளர் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.