மக்களவை தேர்தல் பிரசாரம் இன்று நிறைவடைகிறது.
இந்தியாவில் 18-வது மக்களவை தேர்தல் ஏழு கட்ட தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவுகள் 486 தொதிகளில் நிறைவடைந்துள்ளது.
7-ஆம் கட்டமாக, பஞ்சாபில் 13, உத்தர பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 9, பிகாரில் 8, ஒடிஸாவில் 6, ஹிமாசல பிரதேசத்தில் 4, ஜார்க்கண்டில் 3 தொகுதிகள் மற்றும் சண்டீகர் தொகுதியில் ஜூன் 1-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இத்தொகுதிகளில் இன்று (மே. 5) பிரசாரம் நிறைவடையவுள்ளது. இதன் மூலம் மக்களைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான கடந்த மார்ச் 16 -ஆம் தேதி தொடங்கிய பிரசாரம் இன்று (மே30) முழுமையாக நிறைவடைகிறது.