Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

மக்களவை தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு!

தேர்தல் 2024

மக்களவை தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு!

மக்களவைத் தேர்தலில் 58 தொகுதிகளில் 6-ஆம் கட்டமாக இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 ஆகிய தேதிகளில் 5 கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன.

இந்நிலையில், 6-வது கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

உத்தர பிரதேசத்தில் 14, ஹரியாணாவில் 10, பிகார், மேற்கு வங்கத்தில் தலா 8, டெல்லியில் 7, ஒடிஸாவில் 6, ஜார்க்கண்டில் 4, ஜம்மு- காஷ்மீரில் ஒரு தொகுதிக்கு இன்று (மே 25) காலை முதல் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

More in தேர்தல் 2024

To Top