பலநாள் கழித்து சிக்கிய லோகேஷ்! விக்ரம் இந்த படத்தின் காப்பி?

கமல், விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடிப்பில், கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம். பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில், இந்த படம் பிரபல ஆங்கில வெப் தொடர் ஒன்றின், காப்பி என்று தகவல் பரவி வருகிறது. அதாவது, கடந்த 2015-ஆம் ஆண்டு அன்று, Better Call Saul என்ற வெப் தொடர் வெளிவந்தது.

மகனை கொலை செய்த வில்லன்களை தந்தை பழிவாங்குவதும், தனது பேரனை அவர் காப்பாற்றுவதும் தான், இந்த தொடரின் கதையாம்.

இது விக்ரம் படத்தின் கதையோடு ஒத்துப்போவதால், லோகேஷ் கனகராஜ் காப்பி அடித்துவிட்டதாக கூறி வருகின்றனர். நீண்ட நாள் கழித்து இப்படி சிக்கிட்டீங்களே என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News