விக்ரம் படத்திற்கு பிறகு, எச்.வினோத் இயக்கும் படத்தில் கமல் ஹாசன் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் முடித்த பிறகு, மணிரத்னம் இயக்கத்தில் களமிறங்க உள்ளார்.
இந்நிலையில், சைமா திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அங்கிருந்து மணிரத்னத்திடம், கமல் 234-வது படத்தின் அப்டேட்டை கேட்டார்.
அதற்கு, தயாரிப்பாளரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறி, மணிரத்னம் நழுவிக் கொண்டார்.
இதையடுத்து பேசிய கமல், “உங்கள் முன் தலைநிமிர்ந்து நிற்க என்ன செய்ய வேண்டுமோ, அதை தற்போது செய்து வருகிறோம்” என்று செம மாஸ் பதில் கூறினார்.
மேலும், இந்த படத்திற்காக தான் தற்போது தாடியை வளர்த்து வருகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.