வேலியில் சென்ற ஓணானை வேட்டியில் விட்ட லோகி!

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி 67 திரைப்படம் உருவாக உள்ளது. விக்ரம் படத்திற்கு பிறகு, விஜயும்-லோகேஷ் கனகராஜ்-ம் ஒன்றாக இணைவதால், படத்தின் மீது ஏகப்பட்டு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு, நடிகர் விஷாலிடம் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். ஆனால், விஷால் இதுகுறித்து எந்தவொரு முடிவையும் எடுக்காமல், காலம் தாழ்த்தி வருகிறாராம்.

இந்த தகவலை அறிந்துள்ள சினிமா தரப்பினர், வேலியில் போன ஓணானை வேட்டியில் விட்ட கதையாக இருக்கிறது என்று கருத்து கூறி வருகின்றனர். மேலும், விஷால் கோக்குமாக்கான ஆள் என்றும் சில வலைதளங்களிலேயே பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளனர். என்னதான் ஆகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..