Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

விஜய்க்கு பின் மாஸ் ஹீரோவுடன் லோகேஷ் கனகராஜ் கூட்டணி!

சினிமா

விஜய்க்கு பின் மாஸ் ஹீரோவுடன் லோகேஷ் கனகராஜ் கூட்டணி!

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக, தளபதி விஜயை வைத்து, கேங்ஸ்டர் படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும், இது ஆங்கில படம் ஒன்றின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜயின் படத்தை முடித்த பிறகு, கேஜிஎஃப் பட நடிகர் யாஷ் உடன் லோகேஷ் கனகராஜ் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரில் உள்ள பிரபலம் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து, இந்த திரைப்படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படமும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவலை அறிந்த லோகேஷின் ரசிகர்கள் கடும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top