சின்மயிக்காக 50 ஆயிரத்தை தூக்கி போட்ட லோகேஷ் கனகராஜ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் லியோ. இப்படத்தில் நடித்திருந்த நடிகை த்ரிஷாவுக்கு, பாடகி சின்மயி தான் குரல் கொடுத்திருந்தார்.

டப்பிங் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத சின்மயி, லியோ படத்திற்கு டப்பிங் கொடுத்திருந்தது, தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சலசலப்பை தீர்ப்பதற்கு புத்திசாளிதனமாக லோகேஷ் கனகராஜ், முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத ஒருவர், ஒரு படத்திற்கு டப்பிங் பேச வேண்டும் என்றால், சங்கத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது.

அந்த விதியை அறிந்த லோகேஷ், தனது சொந்த பணத்தை, சின்மயிக்காக கொடுத்து, இந்த பிரச்சனையை தற்போது தீர்த்து வைத்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News