தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்ப்புக்கு உரிய திரைப்படங்களில் ஒன்று லியோ. இந்த திரைப்படம், வரும் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படத்தை புரமோஷன் செய்யும் விதமாக, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.
அந்த பேட்டியில், நாங்கள் லியோ படத்திற்காக மிகப்பெரிய உழைப்பை கொடுத்துள்ளோம்.
குறிப்பாக, படத்தின் முதல் 10 நிமிடத்திற்காக, அனைத்து துறையும் மிகவும் சிறப்பாக வேலை செய்துள்ளது. எனவே, அந்த 10 நிமிடத்தை தவறவிடாதீர்கள் என்று கூறியுள்ளார்.