மீண்டும் இணைகிறேன்.. சுவாரசிய தகவல் சொன்ன லோகேஷ் கனகராஜ்..

‘மாநகரம்’ , ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ ஆகிய படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இவர், தற்போது ‘கூலி’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ரஜினிகாந்த் முதன்மை கதாபாத்திரமாக நடிக்கும் இப்படத்தில், சத்யராஜ், ஆமிர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள புதிய படம் குறித்து, தகவல் கசிந்துள்ளது.

அதாவது, சமீபத்தில் நடந்த விழா ஒன்றில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துக் கொண்டுள்ளார்.

அதில், “கமல் ஹாசனின் படத்தை இயக்கியது எனக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம்” என்றும், “மீண்டும் இன்னொரு முறை அவருடன் இணைந்து பணியாற்ற உள்ளேன்” என்றும் கூறியுள்ளார். இது, ‘விக்ரம் 2’ படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News