மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு, கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய 3 சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
தற்போது, தளபதி விஜயை வைத்து, லியோ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவருடன் கூட்டணி வைப்பதற்கு, பல்வேறு நடிகர்கள் காத்திருக்கும் நிலையில், அதிர்ச்சி தகவல் ஒன்றை லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
அதாவது, சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு, அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “அதிகம் திரைப்படங்கள் இயக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. அதேபோன்று, அதிக வருடங்கள் சினிமாவில் இருக்க வேண்டும் என்ற ஆசையும் இல்லை.
அதிகபட்சமாக, மொத்தம் 10 படங்கள் மட்டும் இயக்கிவிட்டால் போதும் என்ற நிலையில் தான் நான் உள்ளேன். அதற்கு பிறகு, சினிமாவில் இருந்து விலகிவிடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய 5 படங்களை அவர் இயக்கியுள்ளதால், இன்னும் 5 படங்களை மட்டும் தான் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.