Connect with us

Raj News Tamil

அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய லோகேஷ் கனகராஜ்!

சினிமா

அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய லோகேஷ் கனகராஜ்!

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு, கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார்.

தற்போது, நடிகர் ரஜினிகாந்தை வைத்து, கூலி என்ற படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் பலரையும் கவர்ந்திருந்தது.

இந்நிலையில், கூலி படத்திற்காக, லோகேஷ் கனகராஜ் வாங்கியுள்ள சம்பளம் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, இப்படத்திற்கு ரூபாய் 60 கோடி சம்பளமாக அவர் வாங்கியுள்ளாராம். இதற்கு முன்பு இயக்கிய லியோ படத்திற்கு, 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top