“திரையரங்கத்தில் அனுமனுக்கு தனியாக இருக்கை” – ஆதிபுருஷ் படக்குழுவின் அறிவிப்பு!

பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தவர் நடிகர் பிரபாஸ். இந்த படத்திற்கு பிறகு, பெரும்பாலும் பிரம்மாண்ட படங்களிலேயே அவர் நடித்து வந்தார். இந்நிலையில், ராமாயணத்தை அடிப்படையாக வைத்து, ஆதிபுருஷ் என்ற படத்தில், பிரபாஸ் நடித்து வருகிறார்.

ஓம் ராவத் என்பவர் இயக்கி வரும் இந்த திரைப்படம், இந்தி, தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும், ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. மேலும், தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும், இந்த படம் டப்பிங் செய்யப்பட்ட வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடம் பலத்த விமர்சனங்களை பெற்றது.

“இது கார்ட்டூன் திரைப்படமா அல்லது நிஜ திரைப்படமா” , “பாகுபலி படத்தின் மூலம் கிடைத்த புகழை பிரபாஸ் கெடுத்துக் கொள்வாரோ” என்று பலவிதமான கமெண்ட்ஸ்கள் குவிந்தது. இதற்கிடையே, இந்த படம் வரும் 16-ஆம் தேதி ரிலீசாகும் என்று, தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆதிபுருஷ் படக்குழுவினர், புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாகும் அனைத்து திரையரங்குகளிலும், ஒரு இருக்கை கடவுள் அனுமனுக்காக ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமாயணத்தை படமாக எடுத்தால், அதனை கடவுள் அனுமன் அமர்ந்து பார்ப்பார் என்பதற்காக, இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு, ஒரு சிலரிடம் வரவேற்பை பெற்றிருந்தாலும், பல்வேறு தரப்பினர் இதனை கிண்டலடித்தே வருகின்றனர். இதுதொடர்பான சில மீம்ஸ்களும், இணையத்தில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன.

RELATED ARTICLES

Recent News