தந்தையின் கடையில் லாட்டரி வாங்கிய மகனுக்கு ரூ.80 லட்சம் பரிசு விழுந்தது.
கேரள மாநிலம் கோட்டையம் அருகே உள்ள மூவாற்றுப்புழா பகுதியில் ரவீந்திரன் லாட்டரி கடை நடத்தி வருகிறார். ரவீந்திரனின் மகன் ராஜேஷ்குமார் கட்டிட தொழில் செய்து வருகிறார். இவர் தனது தந்தையிடம் தினம் லாட்டரி டிக்கெட் வாங்குவது வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வாங்கிய டிக்கெட்டுகளுக்கு ரூ.5000, ரூ.500 பரிசு கிடைத்தது. அந்த டிக்கெட்டுகளை தந்தையிடமே கொடுத்து காருண்யா பிளஸ் லாட்டரி டிக்கெட் வாங்கினார், அதில் அவருக்கு முதல் பரிசு ரூ.80 லட்சம் விழுந்தது.
தந்தையிடம் வாங்கிய லாட்டரிக்கு ரூ.80 லட்சம் பரிசு கிடைத்தது மகிழ்ச்சியை தருகிறது என்றும், பரிசு பணத்தில் தனக்கு இருக்கும் அனைத்து கடன்களையும் அடைத்து தந்தைக்கு உதவுவேன் என்றும் ராஜேஷ்குமார் கூறினார்.