10 நாட்களில் இத்தனை கோடி வசூலா? கோலிவுட்டை திரும்பி பார்க்க வைத்த லவ் டுடே!

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் லவ் டுடே. இவானா, யோகிபாபு உட்பட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம், சமீபத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றது.

நீண்ட நாட்களுக்கு பிறகு, சிரிப்பு சத்தங்களால், திரையரங்கம் அதிர்ந்தது என்றும் ரசிகர்கள் கூறி வந்தனர். மேலும், பல்வேறு வசூல் சாதனைகளையும் இந்த திரைப்படம் புரிந்துள்ளதாக கூறப்பட்டது.

வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான லவ் டுடே, 10 நாட்கள் முடிவில், 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம். முன்னணி நடிகர்களுக்கு இணையாக இந்த திரைப்படம் வசூலித்து வருவது, கோலிவுட்டையே ஆச்சரியம் அடைய வைத்துள்ளது.