கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ப்ரதீப் ரங்கநாதன். சமீபத்தில் லவ் டுடே என்ற படத்தை இயக்கி, நடித்த இவரை, தமிழ் சினிமா, முன்னணி பிரபலமாக உயர்த்தியது. இதைத்தொடர்ந்து ப்ரதீப் ரங்கநாதனை வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் முன்வந்தனர். இதனிடையே இவர், குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது இயக்குனர் விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயனை வைத்து படம் ஒன்று இயக்குவதாக இருந்தாராம், ஆனால் அந்த படத்தில் ப்ரதீப் ரங்கநாதன் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.