”லவ் டுடே” படம் இந்தி ரீமேக் : நைசாக விலகிய பிரபல தயாரிப்பாளர்..?

கோமாளி இயக்குனர் ”ப்ரதீப் ரங்கநாதன்” உருவாக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ”லவ் டுடே”. கடந்த நவம்பர் அன்று ரிலீஸ் ஆன இப்படம், வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாகவும் ”ப்ளாக்பஸ்டர்” ஹிட் அடித்தது.

தமிழில் மாபெரும் ஹிட் அடித்த ”லவ் டுடே” படத்தின் இந்தி ரீமேக்கை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியது.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இவர், இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை நான் வாங்கவில்லை என்றும், சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் முற்றிலும் தவறானது என்று குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News