அஜித்தையே பின்னுக்கு தள்ளிய பிரதீப் ரங்கநாதன்!

கோமாளி பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் லவ் டுடே. பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த திரைப்படம், வசூலை குவித்து வருகிறது.

இதுவரை, தமிழகத்தில் மட்டும் 80 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த திரைப்படம், அஜித்தின் வலிமை பட வசூலை முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, வலிமை படம், ஆந்திராவில், 6 கோடி ரூபாய் வரை வசூலித்திருந்தது. ஆனால், சமீபத்தில் ஆந்திராவில் வெளியான லவ் டுடே திரைப்படம், 6.6 கோடி ரூபாய் வரை வசூலித்து, அசத்தியுள்ளது.