வாரிசு படத்துடன் கனெக்ஷன் ஆன லவ் டுடே!

கோமாளி படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், தற்போது இயக்கி நடித்துள்ள திரைப்படம் லவ் டுடே. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.

தற்போது, இந்த திரைப்படம், தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரிசு படத்தை தயாரித்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தான், லவ் டுடே படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.