மிகப்பெரிய தப்பு பண்ணிய யுவன்! கடும் அதிர்ச்சி!

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர், அடுத்ததாக லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி, 90-ஸ் கிட்ஸ் முதல் 2K கிட்ஸ் வரை, பல்வேறு தரப்பினரை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் பச்சை இலை என்ற பாடல் வெளியாகி, சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. கஞ்சா இலையை புகைப்பது தொடர்பாக உருவாகியுள்ள இந்த பாடல், தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கஞ்சா புகைப்பதை ஊக்குவிக்கும் வகையில், இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் யுவன் சங்கர் ராஜா இவ்வாறு செய்திருப்பது தவறு என்றும் கூறப்பட்டு வருகிறது. யுவனின் இசை போதையை ரசிகர்கள் ரசிக்கலாம்.. ஆனால், கஞ்சா போதையை புகைப்பது தவறு என்ற கோணத்தில், சமூக ஆர்வலர்கள் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.