கர்நாடகா மாநிலம், சிக்கமகளூருவில் தனியார் பள்ளியின் பேருந்து ஓட்டுநராக பணியாற்றியவர் சந்தோஷ்(28). இவர் இந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவியுடன் நெருங்கி பழகியுள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தும், பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாடிவிட்டு வருவதாக கூறி சென்ற மாணவி அன்று இரவு வரை வீடு திரும்பவில்லை. இந்நிலையில், சிக்கமகளூரு அஜ்ஜம்பூர் அருகே வங்கினகட்டே அருகே தண்டவாளத்தில் சந்தோஷ் மற்றும் மாணவியின் உடல்கள் இருப்பதாக தகவல் வந்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இருவரும் ரயிலின் முன் விழுந்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. எட்டாம் வகுப்பு மாணவியுடன் பள்ளி பேருந்து ஓட்டுநர் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.