ஒருவர் மீது ஒருவர் அமர்ந்து ஆபாச பைக் பயணம்.. அத்துமீறிய காதல் ஜோடி.. வைரல் வீடியோ!

மோட்டார் சைக்கிளில் தனது காதலனுடன் ஆபாசமாக பயணித்த பள்ளி மாணவியின் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

பொது வெளிகளில் காதல் ஜோடிகள் எல்லை மீறுவது அவ்வப்போது நடந்து வருகிறது. இது பல நேரங்களில் அருகில் இருப்பவர்களை கடும் எரிச்சலடைய வைத்து விடுகிறது.

இப்படியான சம்பவம் ஒன்று தற்போது விசாகப்பட்டினத்தில் நடந்துள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டீல் பிளான்ட் சாலையில் இளைஞர் ஒருவரும், பள்ளி சீருடை அணிந்திருந்த அவரது காதலியும், ஆபாசமான முறையில் பயணித்துள்ளனர்.

அப்போது, அந்த வழியாக காரில் வந்த நபர், “ஏன் இப்படி ஆபாசமாக நடந்துக்கொள்கிறீர்கள்” என்று கேட்டுள்ளார். இதற்கு பதில் ஏதும் வழங்காத அந்த காதல் ஜோடி, மீண்டும் அதேபோல் ஆபாசமாக பயணித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.