சென்னையின் மிக முக்கியமான கல்லூரிகளில் ஒன்றாக இருப்பது இலயோலாக் கல்லூரி. சமீபத்தில் இந்த கல்லூரி, தமிழக மக்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார் என்கிற தலைப்பில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது.
அதில் சூர்யா 5வது இடத்தையும், உலக நாயகன் கமல்ஹாசன் 4ஆம் இடத்தையும், இளையதளபதி விஜய் 3வது இடத்தையும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 2ஆவது இடத்தையும் பிடித்துள்ளார். இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் முதலிடத்தை பிடித்துள்ளார்.
சூப்பர்ஸ்டார் ரேஸிலேயே இல்லாத அஜித் முதலிடத்தை பெற்றிருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விஷயத்தை சமூகவலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஷேர் செய்துவருகின்றனர்.