அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் இணைந்து நடித்திருந்த திரைப்படம் லப்பர் பந்து. கிரிக்கெட் விளையாட்டையும், சாதிய பிரச்சனைகளையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
இதன்காரணமாக, இந்த திரைப்படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவை, ஒப்பந்தம் செய்வதற்கு, பல்வேறு தயாரிப்பாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். முதலில், லப்பர் பந்துவை தயாரித்த நிறுவனத்திற்கே, இன்னொரு படம் இயக்குவதாக இருந்தது.
ஆனால், தற்போது, அவர் தனது தயாரிப்பாளர்களை மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது, Dawn Pictures என்ற நிறுவனம் தான், தமிழரசன் பச்சமுத்துவின் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளதாம். இந்த படத்திற்காக, இயக்குநருக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.